வெயிலில் 'ஜில் பீர்' விலை ஜாஸ்தி; 'குடி'மகன்களுக்காக பிரேமலதா குரல்
வெயிலில் 'ஜில் பீர்' விலை ஜாஸ்தி; 'குடி'மகன்களுக்காக பிரேமலதா குரல்
ADDED : மே 02, 2025 04:55 AM
சென்னை : ''டாஸ்மாக்கில் ஏகப்பட்ட விலை ஏற்றம். வெயில் காலத்தில் 'ஜில் பீர்' விலை அதிகமாகி விட்டது,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அளித்த பேட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என பலர் கூறினர். இப்போது, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நிச்சயமாக மக்கள் விரும்பும் எந்த திட்டமாக இருந்தாலும், அதை தே.மு.தி.க., ஏற்றுக் கொள்ளும். மத்திய அரசின் முடிவு, மக்களுக்கு எந்த அளவிற்கு பயன் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில், நீதிமன்ற அறிவுறுத்தல் அடிப்படையில், இரண்டு அமைச்சர்கள் பதவி இழந்து உள்ளதை, தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக வரவேற்றுள்ளனர்.
மூத்த அமைச்சராக இருந்தவர், பொது வெளியில் எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியாமல், ஆபாசமாக பேசியதை, எந்த தனிநபரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
தற்போது அவர் பதவி இழந்துள்ளார். பொதுவெளியில் கருத்துகளை வெளியிடும்போது, எல்லாரும் கவனமாக இருக்க வேண்டும்.
டாஸ்மாக்கில் ஏகப்பட்ட விலை ஏற்றம். வெயில் காலத்தில் 'ஜில் பீர்' விலை ஜாஸ்தியாகி விட்டது. அப்படி இருந்தும் ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., தண்ணீருக்கு பதிலாக பீர் பாட்டில் வைத்து விருந்து கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

