விஜய் பிரசாரத்திற்கு அடுக்கடுக்கான நிபந்தனைகள் போலீஸ் நடவடிக்கையால் த.வெ.க., அதிர்ச்சி போலீஸ் நடவடிக்கையால் த.வெ.க., அதிர்ச்சி
விஜய் பிரசாரத்திற்கு அடுக்கடுக்கான நிபந்தனைகள் போலீஸ் நடவடிக்கையால் த.வெ.க., அதிர்ச்சி போலீஸ் நடவடிக்கையால் த.வெ.க., அதிர்ச்சி
ADDED : செப் 11, 2025 02:54 AM

சென்னை: விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்திற்கு, போலீசார் அடுக்கடுக்கான நிபந்தனைகளை விதிப்பதால், த.வெ.க.,வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகம் முழுதும் நாளை மறுதினம் முதல் டிச., 20ம் தேதி வரை, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.
வாரத்தில் ஒரு நாள், மூன்று மாவட்டங்களில் 112 கி.மீ.,க்கு சுற்றுப்பயணம் செய்யும் வகையில் பயணத் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
இந்த பிரசாரப் பயணத்திற்கு, எளிதாக அனுமதி கிடைக்கும் என த.வெ.க.,வினர் எதிர்பார்த்தனர். ஆனால், போலீசார் பல்வேறு கெடுபிடிகளை விதிக்க துவங்கி உள்ளனர்.
திருச்சியில் டோல்கேட், மேல்புதுார், பாலக்கரை மார்க்கெட் பகுதிகளுக்கு விஜய் செல்கிறார். இதற்காக, நாளை மறுநாள் காலை சென்னையில் இருந்து புறப்பட்டு, 10:30 மணிக்கு அவர் திருச்சி செல்ல உள்ளார். திருச்சியில் பொதுமக்கள் மத்தியில் பேச திட்டமிட்டுள்ளார். இதற்காக, திருச்சி போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.
இதையடுத்து, 'பிரசார வாகனத்திற்கு பின்னால், கட்சியினர் வாகனங்கள் செல்லக்கூடாது; தொண்டர்களை பஸ்களில் அழைத்து வரக்கூடாது; பேசும் இடத்தை தவிர, மற்ற இடத்தில் இறங்கி நடந்து செல்லக்கூடாது' என, பல்வேறு நிபந்தனைகளை போலீசார் விதித்து உள்ளனர்.
திருச்சி மாவட்ட அமைச்சர்கள் நேரு, மகேஷ் உத்தரவின்படி, போலீசார் இது போன்று செயல்படுவதாக த.வெ.க.,வினர் சந்தேகிக்கின்றனர். இந்த தகவல்களை, விஜய் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
சட்ட ரீதியாக போலீசாரை எதிர்கொள்ளும் பணிகளை மேற்கொள்ள, த.வெ.க., வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, சுற்றுப்பயணம் செய்வதற்கு, 1 கோடி ரூபாய் செலவில் புதிய கேரவனை விஜய் வாங்கியுள்ளார். இந்த கேரவனில் நவீன வசதிகள் உள்ளன.
இன்று திருச்சியில் உள்ள நண்பர் வீட்டிற்கு கேரவனை எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
ரூ.1 கோடியில் புதிய கேரவன்
தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்வதற்கு, 1 கோடி ரூபாய் செலவில் புதிய கேரவனை விஜய் வாங்கியுள்ளார். இந்த கேரவனில் சன் ரூப், ஓய்வறை, கழிப்பறை, உணவருந்தும் டேபிள், கூகுள் 'டிவி' உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன. தனியாக கேபின் பிரிக்கப்பட்டு, விஜய் ஓய்வெடுக்க தனி படுக்கை அறை வசதி உள்ளது.
புதுச்சேரி ஜோதிடரின் ஆலோசனைப்படி, விபத்து நடக்காமல் இருக்க சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கேரவன் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இன்று அதிகாலை, திருச்சியில் உள்ள நண்பர் வீட்டிற்கு கேரவனை எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.