24 மணி நேரமும் கடைகள் திறப்பு 3 ஆண்டுகளுக்கு அனுமதி நீட்டிப்பு
24 மணி நேரமும் கடைகள் திறப்பு 3 ஆண்டுகளுக்கு அனுமதி நீட்டிப்பு
ADDED : மே 10, 2025 12:47 AM
சென்னை:கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 24 மணி நேரம் திறந்திருக்க, அரசு வழங்கிய அனுமதி, மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், கடந்த 5ம் தேதி, மதுராந்தகத்தில் நடந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அதில் பேசும் போது, 'பொதுமக்கள் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு ஜூன், 4ம் தேதி முடிகிறது. எனினும், மேலும் 3 ஆண்டுகளுக்கு அனுமதியை நீட்டித்து அரசாணை வெளியிடப்படும்' என்று, அறிவித்தார்.
அதன்படி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தில் ஏழு நாட்களும், 24 மணி நேரமும் இயங்க, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அரசாணையை தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது.

