கடையநல்லூரில் துணை ராணுவப்படையினர்- போலீசார் கொடி அணிவகுப்பு
கடையநல்லூரில் துணை ராணுவப்படையினர்- போலீசார் கொடி அணிவகுப்பு
ADDED : மார் 28, 2024 07:18 PM

கடையநல்லூர்:தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் கடையநல்லூரில் துணை ராணுவப்படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.
இந்த அணிவகுப்பில் புளியங்குடி உட்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கடையநல்லூர் ராஜா, புளியங்குடி பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் . பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் போலீசாரின் இந்த கொடி அணிவகுப்பை கடையநல்லூர் காவல் நிலையத்திலிருந்து தொடங்கி கிருஷ்ணாபுரம்,முத்து கிருஷ்ணாபுரம், மாவடி கால் பேட்டை மேல கடையநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று கடையநல்லூர் தாலுகா அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது இந்த அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர் வாசுதேவநல்லூர் கண்மணி, சிவகிரி சண்முக லட்சுமி, அனைத்து மகளிர் காவல் ஜெயலட்சுமி மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் சுதாகர், முருகேஸ்வரி சொக்கம்பட்டி உடையார்சாமி, புளியங்குடி சஞ்சய் காந்தி, வாசுதேவநல்லூர் அவிவீனா, சேந்தமரம் ராமச்சந்திரன் மற்றும் போலீசார், துணை ராணுவப் படையினர் கலந்து கொண்டனர்.

