மருத்துவ கழிவுகளுடன் கேரள லாரி பல்லடம் அருகே சிறைபிடிப்பு!
மருத்துவ கழிவுகளுடன் கேரள லாரி பல்லடம் அருகே சிறைபிடிப்பு!
UPDATED : ஜன 31, 2025 08:56 PM
ADDED : ஜன 31, 2025 08:37 PM

பல்லடம்; பல்லடம் அருகே கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த பணிக்கம்பட்டி ஊராட்சி வேலப்ப கவுண்டம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது.
இந்த குடோனுக்கு கேரள மாநிலம், பாலக்காட்டில் இருந்து மருத்துவ கழிவுகள் ஏற்றிய லாரி ஒன்று இன்று (ஜன.31) வந்தது. இதுபற்றிய தகவல் அங்குள்ள ஊர் மக்களுக்கு தெரிய வர, கொதித்து எழுந்தனர்.
உடனடியாக, சம்பவ பகுதியில் ஒன்று திரண்ட அவர்கள், கேரள லாரியை சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பொதுமக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
மருத்துவ கழிவுகளுடன் வந்த லாரி யாருடையது, கழிவுகளை பல்லடத்துக்கு அனுப்பியவர், வாகன உரிமையாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

