அனுமதியின்றி பேட்டி கொடுக்க அ.தி.மு.க.,வினருக்கு பழனிசாமி தடை
அனுமதியின்றி பேட்டி கொடுக்க அ.தி.மு.க.,வினருக்கு பழனிசாமி தடை
ADDED : ஏப் 17, 2025 09:54 PM
சென்னை:'தலைமையின் அனுமதியின்றி, அ.தி.மு.க., நிர்வாகிகள் யாரும் சமூக வலைதளங்கள், ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது' என அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, அ.தி.மு.க., வெளியிட்டுள்ள அறிக்கை:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம் முதல், அ.தி.மு.க., ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் முக்கிய முடிவுகள், நிலைப்பாடுகள் குறித்த தகவல்களை, உரிய நேரத்தில், உரிய முறையில் தலைமை அறிவிக்கும்.
எணவே, அ.தி.மு.க., தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும், கட்சியின் மீது பற்று கொண்டவர்களும், தலைமையின் அனுமதியின்றி, கட்சியின் நிலைப்பாடுகள், செயல்பாடுகள் குறித்து, எந்த கருத்துகளையும், சமூக வலைதளங்கள், ஊடகங்களில் தெரிவிக்கக் கூடாது; பேட்டி கொடுக்கக்கூடாது. கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி ஒப்புதலோடு, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

