ADDED : அக் 15, 2024 06:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, வீடுகளுக்குள் புகும் பாம்புகளை பிடிக்க உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழையின் போது, வீட்டிற்குள் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகளை பிடிக்க, 044-2220 0335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை அறிவித்துள்ளது.

