ADDED : மார் 19, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருப்பூர் லோக்சபா தொகுதியில் மீண்டும் சுப்பராயனும், நாகப்பட்டினம் தொகுதியில் மாவட்ட செயலர் வை.செல்வராஜும் போட்டியிடுகின்றனர்.
தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என, இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான மாநில குழு கூட்டம், சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில், திருப்பூர் தொகுதிக்கு மீண்டும் கே.சுப்பராயனும், நாகப்பட்டினம் தொகுதியின், 'சிட்டிங்' எம்.பி., செல்வராஜ் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால், மாவட்ட செயலர் வை.செல்வராஜும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்கான அறிவிப்பை மாநில செயலர் முத்தரசன் நேற்று வெளியிட்டார்.

