விவாதிக்கவில்லை; வியந்து பேசவில்லை; திருமாவளவன் வருத்தம் நியாயமானதா?
விவாதிக்கவில்லை; வியந்து பேசவில்லை; திருமாவளவன் வருத்தம் நியாயமானதா?
ADDED : நவ 12, 2024 10:54 AM

சென்னை: 'கள்ளக்குறிச்சி மாநாட்டில் கூடிய கூட்டம் பற்றி யாரும் வியந்து பேசவில்லை; விவாதிக்கவில்லை' என்று வருத்தப்பட்டு திருமாவளவன் பேசியிருப்பது, நியாயமானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன்: வி.சி.,க்கள் சார்பில் கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது; அதில், 2 லட்சம் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், அதை எல்லாம் யாரும் வியந்து பேசவில்லை; பெயருக்குக் கூட விவாதிக்கவில்லை. வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து, 'இனி திருமாவளவன் தலைமையில்தான் தமிழகத்தில் ஆட்சி அமையும்' என, யாரும் விவாத பொருளாக்கவில்லை. எல்லாரும் வி.சி.,க்களை குறைத்து மதிப்பிட்டு, சிறுமைப்படுத்த பார்க்கின்றனர்.
டவுட் தனபாலு கமென்ட்: உங்க கட்சிக்கு செல்வாக்கு இருக்கிற கள்ளக்குறிச்சியில் மாநாடு நடத்தி, 2 லட்சம் பேரை திரட்டியது பெரிய விஷயமில்லை... கன்னியாகுமரியிலோ, திருநெல்வேலியிலோ மாநாடு நடத்தி, இந்த கூட்டத்தை காட்டியிருந்தா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
-நமது நிருபர்-

