துாத்துக்குடி - நாகை இடையே ரூ.12,005 கோடியில் புதிய சாலை
துாத்துக்குடி - நாகை இடையே ரூ.12,005 கோடியில் புதிய சாலை
ADDED : நவ 12, 2024 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: துாத்துக்குடி - நாகப்பட்டினம் துறைமுகங்களை இணைக்கும் வகையில், 12,005 கோடி ரூபாயில், புதிய நான்கு வழிச்சாலை அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த இரண்டு துறைமுகங்களுக்கு இடையேயான சாலை போக்குவரத்தை மேம்படுத்த, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டம் வகுத்துள்ளது.
அதன்படி, துாத்துக்குடி துறைமுகம் - ராமநாதபுரம் இடையே, 134 கி.மீ.,க்கு புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 4,915 கோடி ரூபாய் வரை தேவைப்படும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை, 174 கி.மீ.,க்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.
இதற்கு, 7,090 கோடி ரூபாய் தேவைப்படும். மொத்தம் 12,005 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.

