ADDED : அக் 02, 2024 10:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சோமாஸ்கந்தர் சிலை விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் கூறியதாவது:
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து திருடப்பட்ட சோமாஸ்கந்தர் சிலை, அமெரிக்காவில் இருப்பதை நான், 2018ல் கண்டுபிடித்து கூறினேன்.
ஆறு ஆண்டுகளாகியும் அதை கண்டுபிடிக்காமல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அலட்சியமாக செயல்படுகிறது. தஞ்சை மாவட்டம் தீபங்குடியில் சமணர் சிலையை திருடியது குறித்த விபரங்களையும் தெரிவித்தேன். அதுவும் மீட்கப்படவில்லை.
சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் மகள் மம்தா, சகோதரி சுஷ்மா ஷெரின், நீல்பெரி ஸ்மித் மற்றும் சிங்கப்பூரில் உள்ள பரமேஸ்வரி பொன்னுச்சாமி ஆகியோரை பிடித்தால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைளை மீட்கலாம்.
இவ்வாறு கூறினார்.

