டில்லியில் கோரிக்கை மனுக்களை நிர்மலாவிடம் வழங்கினார் நயினார்
டில்லியில் கோரிக்கை மனுக்களை நிர்மலாவிடம் வழங்கினார் நயினார்
ADDED : டிச 14, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகம் முழுதும், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' என்ற பெயரில், மாவட்ட வாரியாக மக்களை சந்தித்து வருகிறார்.
அப்போது, வணிகர்கள், தொழில் துறையினர் உள்ளிட்டோரை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க, நேற்று டில்லி சென்றார். நேற்று மாலை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, தன் சுற்றுப்பயணத்தின்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பெறப்பட்ட மனுக்களை, நிர்மலா சீதாராமனிடம் அவர் வழங்கினார்.
இதன்தொடர்ச்சியாக இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுகிறார் நயினார் நாகேந்திரன்.

