sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எம்.எல்.ஏ., ஆவாரா பொன்முடி?

/

எம்.எல்.ஏ., ஆவாரா பொன்முடி?

எம்.எல்.ஏ., ஆவாரா பொன்முடி?

எம்.எல்.ஏ., ஆவாரா பொன்முடி?


ADDED : மார் 12, 2024 01:33 AM

Google News

ADDED : மார் 12, 2024 01:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொன்முடியின் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது குறித்து, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன் கூறியதாவது:

குற்றவாளி என்ற தீர்ப்புக்கு, உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ தடை விதித்தால், எம்.எல்.ஏ., தகுதியிழப்பு நீங்கி விடும்.

ஒருவர் குற்றவாளி என்றால் தான், அதற்கான தண்டனை வரும்; குற்றவாளி என்பதற்கு தடை விதிக்கப்பட்டால், சட்டத்தின் பார்வையில் அவரை குற்றவாளியாக கருத முடியாது; தண்டனை என்பதும் வராது. அப்போது, ஏற்கனவே வகித்த எம்.எல்.ஏ., பதவி மீண்டும் வந்து விடும்.

குற்றவாளி என்பதற்கு தடை விதிக்காமல், தண்டனையை மட்டும் நிறுத்தி வைத்தால், எம்.எல்.ஏ., தகுதியிழப்பு நீங்காது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், சிறைக்கு செல்ல வேண்டாம்; மேல்முறையீட்டில் தீர்ப்பு வரும் வரை வெளியில் இருக்கலாம்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு, குஜராத் நீதிமன்றம் இரண்டாண்டு சிறை தண்டனை விதித்ததை தொடர்ந்து, எம்.பி., பதவி பறிபோனது. குஜராத் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதிக்கவில்லை; உச்ச நீதிமன்றம் தான் தடை விதித்தது. அதைத்தொடர்ந்து, அவருக்கு எம்.பி., பதவி மீண்டும் வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்

.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us