ADDED : மே 04, 2025 03:39 AM
தமிழக முதல்வர், தன் அமைச்சரவை சகாக்களை மாற்றிக்கொண்டே இருக்கக்கூடிய சூழல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அடுத்து வரும் சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழக அமைச்சரவையில் இருக்கக்கூடிய எத்தனை அமைச்சர்கள், அமைச்சர் என்ற அடைமொழி இல்லாமல் மக்களை சந்திப்பர் என்பதை, நாம் அனைவரும் பார்க்கத்தான் போகிறோம்.
சில சமயம், மக்களையே சந்திக்க முடியாத சூழ்நிலை கூட, அந்த எம்.எல்.ஏ.,க்களுக்கு ஏற்படலாம். அவர்கள் செய்த செயலுக்கான வினையை அனுபவிக்கப் போகின்றனர். வரும் சட்டசபை தேர்தல் மட்டுமல்ல; மக்களும் கூட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கும், அமைச்சர்களாக இருப்போருக்கும் ஏன்... முதல்வர், துணை முதல்வருக்கே கூட மிகக் கடுமையாகத்தான் இருக்கப் போகின்றனர்.
அதனால், மிச்ச சொச்ச காலங்களிலாவது, ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஓட்டு போட்ட மக்களுக்கு தி.மு.க., தரப்பு நல்லதை செய்ய வேண்டும்.
- வானதி,
பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர்

