ADDED : செப் 26, 2024 02:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரீசில் நடந்த 'பாரா ஒலிம்பிக்' போட்டிகளில், வெள்ளிப் பதக்கம் வென்ற, பாட்மின்டன் வீராங்கனை துளசிமதிக்கு 2 கோடி; வெண்கலம் வென்ற வீராங்கனையர் நித்யஸ்ரீ, மனிஷா; உயரம் தாண்டுதலில் வெண்கலம் வென்ற மாரியப்பன் ஆகியோருக்கு, தலா 1 கோடி ரூபாய் என மொத்தம், 5 கோடி ரூபாய்க்கான காசோலைகளை, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த தேசிய குதிரையேற்ற போட்டிகளில், சென்னையை சேர்ந்த சாமன்னா எவேரா, பல்வேறு கட்டளைகளுக்கு ஏற்ப குதிரையை ஆட்டுவிக்கும் சி.டி.என்., டிரஸ்ஸேஜ் போட்டியில், 70.73 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். இந்தாண்டில் மட்டும், மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். இவரை, தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நேற்று முன்தினம் நேரில் அழைத்து பாராட்டினார்.

