ADDED : செப் 24, 2024 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவுசார் குறைபாடு மற்றும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட 1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டம், நடப்பாண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு, 1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான, 'டிட்டோ ஜாக்' நிர்வாகிகள், சென்னை தலைமை செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் மதுமதி உள்ளிட்டோருடன் நேற்று பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்பட்டதால், ஏற்கனவே அறிவித்திருந்த கோட்டை முற்றுகை போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

