தொகுதி பங்கீடு பேச்சுக்கு மார்க்சிஸ்ட் 4 பேர் குழு
தொகுதி பங்கீடு பேச்சுக்கு மார்க்சிஸ்ட் 4 பேர் குழு
ADDED : ஜன 27, 2024 02:19 AM
சென்னை:தி.மு.க.,விடம் தொகுதி பங்கீடு பேச்சு நடத்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், நான்கு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், சென்னையில் நேற்று மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி தலைமையில் நடந்தது. அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் சம்பத், வாசுகி, சண்முகம் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், லோக்சபா தேர்தலில், மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க.,வையும் அம்பலப்படுத்தி, வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது.
தி.மு.க., குழுவுடன் தொகுதி உடன்பாடு தொடர்பாக பேச்சு நடத்த, நான்கு பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய குழு உறுப்பினர்கள் சம்பத், சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், கனகராஜ் ஆகியோர் அக்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

