பிரபல நிறுவனம் பெயரில் போலி பொருள் விற்றவர் கைது
பிரபல நிறுவனம் பெயரில் போலி பொருள் விற்றவர் கைது
ADDED : டிச 23, 2025 07:37 AM

சென்னை : பிரபலமான கிரிலோஸ்கர் நிறுவனத்தின் பெயரில், போலி பொருட்கள் விற்ற நபர் கைது செய்யப்பட்டார். சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவில், 'கிரிலோஸ்கர்' நிறுவனத்தின் தயாரிப்பான மின் சாதனங்களை, சிலர் போலியாக தயாரித்து விற்பனை செய்வதாக, சென்னையைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் புகார் அளித்தார்.
இதையடுத்து, ஐ.ஜி., செந்தில்குமாரி தலைமையில், போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பிச்சாண்டி, 48, என்பவர், கிரிலோஸ்கர் நிறுவன பெயரில், போலி மின் சாதனங்களை விற்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 80,000 ரூபாய் மதிப்புள்ள போலி மின் சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர் விசாரணையில், கைதான நபர் ஹரியானா மாநிலத்தில் இருந்து, போலி மின் சாதனங்களை வாங்கி வந்து சென்னையில் விற்றது தெரியவந்தது.

