"தமிழகத்தில் கடைசி நேரத்தில் கூட்டணி மாறலாம்": டில்லியில் அண்ணாமலை பேட்டி
"தமிழகத்தில் கடைசி நேரத்தில் கூட்டணி மாறலாம்": டில்லியில் அண்ணாமலை பேட்டி
ADDED : பிப் 07, 2024 01:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரதமர் மோடியை ஏற்பவர்கள் கூட்டணியில் சேரலாம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது குறித்து டில்லியில் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கூட்டணிக்குள் யாரையும் வலுக்கட்டாயமாக இழுக்கும் வேலையை பா.ஜ., செய்யவில்லை. தமிழகத்தில் கடைசி நேரத்தில் கூட கூட்டணி மாறலாம். பிரதமர் மோடியை ஏற்பவர்கள் கூட்டணியில் சேரலாம். கூட்டணிக்கு வரலாம் என்று அ.தி.மு.க.வை குறிப்பிட்டு அமித்ஷா பேசவில்லை.
எல்லோரும் வரலாம். யார் வேண்டுமானாலும் வரலாம் என்றே அமித்ஷா கூறியுள்ளார். தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட வரலாம் எனவும் அமித்ஷாவின் பேச்சு பொருள்படும். இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் தமிழகத்தில் பா.ஜ., கூட்டணி இறுதி செய்யப்படும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

