திமுக எம்.பி., ஆ.ராசாவிடம் ஓட்டு கேட்ட அதிமுக.,வினர்
திமுக எம்.பி., ஆ.ராசாவிடம் ஓட்டு கேட்ட அதிமுக.,வினர்
ADDED : ஏப் 11, 2024 06:04 PM

மேட்டுப்பாளையம்: அதிமுக.,வினர் ஓட்டு கேட்டு நோட்டீஸ் வழங்கிக்கொண்டிருந்தபோது அந்த வழியாக காரில் சென்ற நீலகிரி வேட்பாளரும், திமுக எம்.பி.,யுமான ஆ.ராசாவிடமும் நோட்டீஸ் வழங்கி ஓட்டு கேட்டனர்.
ஊட்டி சாலையில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அ.தி.மு.க.,வினர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த திமுக எம்.பி., ஆ.ராசாவை பார்த்து, அங்கு கூடியிருந்த அ.தி.மு.க., தொண்டர்கள், ''போடுங்கம்மா ஓட்டு இரட்டை இலையை பார்த்து'' என கோஷம் போட்டனர்.
உடனடியாக காரை நிறுத்திய ராசா, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் ''பா.ஜ., வெற்றி பெற்றுவிடவே கூடாது'' என்றார். அவருக்கு அ.தி.மு.க.,வினர் நோட்டீஸ் வழங்கினர். இதனிடையே ராசா, பேசிக்கொண்டு இருந்தபோது தி.மு.க., தொண்டர் ஒருவர், தி.மு.க.,வுக்கு ஓட்டு கேட்டு எதிர் கோஷம் எழுப்பினார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

