நாட்டில் நடப்பது மோடி அரசு அல்ல, அதானி, அம்பானி அரசு: கோவையில் ராகுல் தாக்கு
நாட்டில் நடப்பது மோடி அரசு அல்ல, அதானி, அம்பானி அரசு: கோவையில் ராகுல் தாக்கு
UPDATED : ஏப் 13, 2024 09:39 AM
ADDED : ஏப் 12, 2024 08:33 PM

கோவை: கோவை செட்டிபாளையத்தில் நடந்த இண்டியா கூட்டணி தேர்தல் பிரசார கூட்டத்தில் காங். எம்.பி,.ராகுல் பேசியதாவது,
நாட்டில் நடப்பது மோடி அரசு அல்ல, அதானி, அம்பானி ஆட்சி நடக்கிறது. இந்தியாவில் முக்கிய துறைகள் அனைத்தும் அதானிக்கே வழங்கப்படுகிறது. அதானியின் சலுகைகள் குறித்து நான் பார்லிமென்ட்டில் பேசியதால் என்மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. எனது எம்.பி. பதவியை பறித்தது.
தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் நான் நேசிக்கிறேன்.நாட்டு மக்களின் பலரின் இதயங்களில் வாழ்ந்ததால் எனது வீட்டை எடுத்துக்கொண்ட போதும் கூட நான் கவலைப்படவில்லை. தமிழர்களி்ன் வீட்டில் நான் உள்ளேன்.எனக்கு பல லட்சக்கணக்கான வீடுகள் இருக்கின்றன; அவை உங்கள் இதயங்களில் இருக்கின்றன. தமிழக மக்கள் எனக்காக தங்கள் வீட்டுக்கதவை திறந்து வைப்பார்கள்.
தமிழர்களுக்கென தனியாக வரலாறு இருக்கிறது. தோசை பிடிக்கும் என கூறும் மோடி , இங்கிருந்து சென்றதும் தமிழ் மீது ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள் . டில்லி சென்றதும் ஒரு நாடு ஒரு தேர்தல் என்கிறீர்கள். தோசை மட்டுமல்ல, மோடிக்கு வடை கூட பிடிக்கலாம் ஆனால் பிரச்னை அது அல்ல. மோடிக்கு தமிழ்நாட்டை பிடிக்குமா? தமிழர்களுக்காக மோடி என்ன செய்தார் என்பது தான் பிரச்னை.
தமிழர்கள் புத்திசாலிகள் , யாரை எப்படி மதிக்க வேண்டும் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். தமிழ்மொழி வரலாறு மீது ஏன் தாக்குதல் நடத்துகிறீர்கள்.
ஊழல் செய்தவர்கள் பா.ஜ., வைத்துள்ள வாஷிங்மிஷினுக்குள் சென்றால் சுத்தமாகிவிடுகிறார்கள் எனது மூத்த அண்ணன் ஸ்டாலினை தவிர வேறு யாரையும் நான் அண்ணன் என அழைத்ததில்லை.
தேர்தல் பத்திரம் சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் கூறியது, பா.ஜ., ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 83 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். தேர்தல் பத்திரம் மூலம் பல்லாயிரம் கோடி பணம் பெற்றுள்ளது பா.ஜ., உலகிலேயே பா.ஜ. செய்த தேர்தல் பத்திர ஊழலின் சிறு பகுதி. ஆங்கிலேயர் காலத்தைவிட இந்தியா இப்போது மோசமான நிலையில் உள்ளது.
தமிழக இளைஞர்களுக்கு மிகப்பெரிய பிரச்னை ‛நீட்' . நீட்' தேர்வை பொறுத்தவரை அந்தந்த மாநில மக்களின் முடிவுக்கு விடப்படும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
வேலைவாய்ப்புக்குள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வேலைவாய்ப்பு பயிற்சி சட்டம் கொண்டு வரப்படும். இதில் 6 மாதம் பயிற்சி அளித்து தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாய விலை பொருட்களுக்கும், விவசாயிகளுக்கும் குறைந்த பட்ச ஆதார விலை வழங்கப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் வேலைவாயப்பு அதிகரிக்கப்படும். மகளிருக்கு ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
விசாரணை அமைப்புகளை வைத்து ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். அரசியல் சாசன ஆன்மா மீது மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தாக்குதல் நடத்துகிறது. இந்தியா என்பது மக்களுக்கானது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு சொந்தமானது அல்ல.
எனவே இத்தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை நீங்கள் ஆதரவு அளித்து வாக்களித்து வெற்றி பெற செய்ய வேணடும். இண்டியா கூட்டணி இத்தேர்தலில் வெற்றி பெறும். இவ்வாறு ராகுல் பேசினார்.
கோவையில் இனிப்பு வாங்கிய ராகுல்
கோவையில் பிரசாரத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி இனிப்பு வாக்கிய ராகுல் உடன் பணியாளர்கள் செல்பி எடுத்துக்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

