கொலை முயற்சி வழக்கில் வழக்கறிஞருக்கு 8 ஆண்டு சிறை
கொலை முயற்சி வழக்கில் வழக்கறிஞருக்கு 8 ஆண்டு சிறை
ADDED : நவ 15, 2025 05:42 AM

மதுரை: மதுரை பைபாஸ் ரோடு பகுதியிலுள்ள கவுரி கிருஷ்ணா ஓட்டல் நிர்வாகத்திற்கும், வழக்கறிஞர் கார்மேகத்திற்கும் இடையே இடப்பிரச்னை இருந்தது. கார்மேகம்2016 ஏப். 23 ல் ஓட்டலுக்குச் சென்றார். மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். காரை ஓட்டலுக்குள் செலுத்தி, உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தினார். ஓட்டல் ஊழியர்களில் சிலர் காயமடைந்தனர். கார்மேகம் மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்தனர். மதுரை 5 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவில், கார்மேகத்திற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது,' என்றார். கார்மேகம் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஓட்டலுக்குள் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது தொடர்பாக அப்போது கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகின.

