ADDED : ஜூலை 28, 2025 02:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை விமான நிலையம் அருகே, 'லேசர் லைட்' அடிக்கவும், வெப்பக்காற்று பலுான்கள் மற்றும் 'ட்ரோன்' உள்ளிட்ட பொருட்கள் பறக்க விடுவதற்கும் விதிக்கப்பட்டுள்ள தடை, செப்டம்பர் 24 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அருண் பிறப்பித்துள்ளார்.
விமான நிலையம் அருகே, வீடுகள், தெருக்கள், கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவகங்கள், விருந்து கூடங்கள் போன்ற இடங்களில், இத்தகைய பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

