ADDED : பிப் 15, 2024 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் அங்கீகாரமில்லாத மனைகள் விற்க தடை உள்ளது. இதில், 2016 அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லாத மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறை செய்யும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது.
இதில் விண்ணப்பம் பெறுவதற்கான அவகாசம், 2019, நவ., 3ல் முடிந்தது. விடுபட்ட நபர்களின் கோரிக்கை அடிப்படையில், விண்ணப்பிக்க கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்படி, வழங்கப்பட்ட கூடுதல் கால அவகாசம், பிப்., 29ல் முடிய உள்ளது. விண்ணப்பங்களை பதிவு செய்ய, www.tnlayoutreg.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் என, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை அறிவித்துள்ளது.

