ADDED : ஆக 19, 2024 07:27 AM

கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், ராஜ்நாத்சிங் வேண்டுகோளை ஏற்று, கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று, கைதட்டி ஆரவாரம் செய்தனர்
* விழா மேடையின் பின்புறம் அமைக்கப்பட்ட பேக் ரேப்பரில், 'காவி' நிறத்தில் லைட்டிங் அமைக்கப்பட்டிருந்தது. வள்ளுவர் கோட்ட முகப்பு வைக்கப்பட்டிருந்தது. அதன் முன், பண பெட்டகத்தின் மேலே கருணாநிதி உருவ நாணயம் எழுந்து வருவது போல, செட்டிங்ஸ் அமைக்கப்பட்டிருந்தது. இதை, ராஜ்நாத் சிங் பொத்தானை அழுத்தி துவக்கி வைக்கவும், நாணயம் எழுந்து வந்த காட்சியை, ராஜ்நாத் சிங் திரும்பி பார்த்து ரசித்தார்
* கருணாநிதி ஆட்சியில் வரப்பட்ட கைரிக் ஷா ஒழிப்பு, சமத்துவபுரம், சிப்காட், குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், அவரின் அரசியல் மற்றும் கலையுலக வாழ்க்கை குறித்த, 2 நிமிட குறும்படம் திரையிடப்பட்டது. அதை ராஜ்நாத் கைதட்டி ரசித்து பார்த்தார்.

