ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
ராஜ்யசபா சீட்டுக்காக சந்திக்கவில்லை; முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபின் கமல் பேட்டி
UPDATED : ஏப் 16, 2025 01:31 PM
ADDED : ஏப் 16, 2025 01:22 PM

சென்னை: ''ராஜ்ய சபா சீட்டுக்காக சந்திக்கவில்லை'' என முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் நடிகர் கமல்ஹாசன் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்வு கிடைத்ததால் அதனைக் கொண்டாடுவதற்காக முதல்வரைச் சந்தித்தேன்.
கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இந்தியாவிற்கே சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பு தேசிய அளவில் கொண்டாடப்பட வேண்டியது. ராஜ்ய சபா சீட்டுக்காக இப்போது சந்திக்கவில்லை. இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க., கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. ராஜ்யசபாவில் ஒரு சீட் ஒதுக்கப்படும் என கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

