ADDED : மார் 10, 2024 01:57 AM
சென்னை:கோடைக்கால வெப்பம் அதிகரித்து உள்ள நிலையில், காலை 11:00 முதல் பிற்பகல் 3:30 மணி வரை, பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்ப்பதுடன், செயற்கை குளிர்பானங் களையும் தவிர்க்க வேண் டும் என, பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோடைக்கால வெயில் சுட்டெரிக்கத் துவங்கியுள்ளது. வெயிலில் வெளியே வருவோருக்கு இதயப் பாதிப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என, பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
அதிக உடல் வெப்பநிலையில் மயக்கம் ஏற்பட்டவர்கள், குழப்பமான மனநிலையில் இருப்பவர்களுக்கு, உடனடியாக அவர்களது ஆடையின் மீது குளிர்ந்த நீரை ஊற்றலாம்.
மேலும், 108 மற்றும் 104 எண்களில் மருத்துவ உதவியை நாட வேண்டும் என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தி உள்ளார்.
அத்துடன், கோடைக்காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய மற்றும் பின்பற்றக் கூடாதவை குறித்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளன.

