அயர்லாந்து ஆன்டனிக்கு காளை அடக்க ஆசை: அலங்காநல்லூருக்கு ஓட்டமாய் வந்தும் பலனில்லை என வருத்தம்
அயர்லாந்து ஆன்டனிக்கு காளை அடக்க ஆசை: அலங்காநல்லூருக்கு ஓட்டமாய் வந்தும் பலனில்லை என வருத்தம்
ADDED : ஜன 16, 2025 09:40 AM

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடிக்க வந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் ஆன்டனி, 52, மருத்துவ பரிசோதனைக்கு பின் வயது மூப்பு காரணமாக நிராகரிக்கப்பட்டார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 மணி அளவில் துவங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. அண்டை நாட்டினரும் ஜல்லிக்கட்டு மைதானத்தில் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடிக்க வந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான் ஆன்டனி, 52, மருத்துவ பரிசோதனைக்கு பின் வயது மூப்பு காரணமாக நிராகரிக்கப்பட்டார்.
யார் இந்த கான் ஆண்டனி?
* அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் கான்ட் ஆண்டனி. இவருக்கு வயது 52.
* இவர் சென்னை, கிண்டியில் 14 வருடமாக வசித்து வருகிறார். இவரிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களும் உள்ளன.
* இவர் சென்னையில் ஐ.டி., கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார்.
* கடந்த சில ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு போட்டி நேரில் பார்த்து வந்துள்ளார். இதில் இவருக்கு ஆர்வம் வந்தது.
* இவர் 42 கிலோமீட்டர் வரை மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றுள்ளார். இவருக்கு தமிழகத்தில் நடக்கும் பழமையான போட்டிகளை கண்டு களிப்பதில் நாட்டம் அதிகம்.
வருத்தம் அளிக்கிறது!
இவர் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: அண்டை நாடுகளை ஒப்பிடும்போது தமிழகத்தில் சிறப்பாக காளைகள் வளர்க்கப்படுகிறது. போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.
எனக்கு உடல் தகுதிகள் அனைத்தும் இருந்து, வயது மூப்பை காரணம் காட்டி தகுதி நீக்கம் செய்தது வருத்தம் அளிக்கிறது.
அயல்நாடுகளை ஒப்பிடும்போது தமிழகத்தில் வித்தியாசமான முறையில் போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

