ADDED : பிப் 19, 2024 04:00 AM
சரவெடி தயாரிக்க அனுமதி மறுப்பதாலும், பட்டாசு தயாரிக்கும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை விதித்ததாலும், வெம்பக்கோட்டை பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் இன்றுமுதல் கால வரையின்றி மூட, தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கமான டாப்மா முடிவு செய்துள்ளது.
உச்சநீதிமன்றம் பட்டாசு தயாரிப்பில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி சரவெடி தயாரிக்க தடை விதித்துள்ளது. மேலும் குறைந்த மாசு உள்ள பசுமை பட்டாசு மட்டுமே உற்பத்தி செய்ய அறிவுறுத்தி உள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்காத பசுமை பட்டாசு தயாரிப்பது குறித்து புதிய பார்முலாவை உருவாக்கி, உற்பத்தியாளர்ளுக்கு பயிற்சி அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பேரியம் நைட்ரேட் பயன்படுத்த அனுமதி மறுக்கப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றுமுதல் காலவரையின்றி தொழிற்சாலைகளை மூடப் போவதாக, தமிழன் பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.

