UPDATED : டிச 24, 2025 01:09 PM
ADDED : டிச 24, 2025 07:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன், நாளை பணிக்கு திரும்ப உள்ளார்.
தமிழக காவல் துறையின் பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமனுக்கு, கடந்த, 9ம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வகித்து வந்த, டி.ஜி.பி., பொறுப்பு, லஞ்ச ஒழிப்பு துறை டி.ஜி.பி., அபய்குமார் சிங்கிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.
சிகிச்சை
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வெ ங்கட் ராமனுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மே ற்கொள்ளப்பட்டது. இதில் ரத்த நாளங்களின் அ டை ப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கென இரண்டு இடங்களில் அவருக்கு stent பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் ஓய்வில் இருந்த அவர் குணமடைந்த நிலையில் நாளை பணிக்கு திரும்புகிறார்.

