மகனுக்கு சீட் தராததால் எனக்கு அதிருப்தி இல்லை: அப்பாவு விளக்கம்
மகனுக்கு சீட் தராததால் எனக்கு அதிருப்தி இல்லை: அப்பாவு விளக்கம்
ADDED : ஏப் 03, 2024 02:08 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி லோக்சபா தொகுதியில் போட்டியிட தனது மகனுக்கு சீட் வழங்காததால் நான் அதிருப்தியில் இருப்பதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நிருபர்களிடம் அப்பாவு கூறியதாவது: திருநெல்வேலி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியதாலோ, எனது மகனுக்கு சீட் வழங்கவில்லை என்பதாலோ எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தொகுதி பங்கீடு, தேர்தல் பணிகள் குறித்து திமுக தலைவர் முடிவுகளை எடுக்கலாம். திருநெல்வேலி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட 44 பேர் விருப்ப மனு அளித்தனர். ஆனால் அது கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தனது மகனுக்கு போட்டியிட சீட் கொடுக்க வேண்டும் என்று ஸ்டாலினை சந்தித்து அழுத்தம் கொடுக்கக்கூடிய அளவிற்கு விவரம் இல்லாதவன் நான் இல்லை . இவ்வாறு அப்பாவு கூறினார்.

