" துவேச கருத்துகளை பேசுவதா? "- பிரதமர் மோடி மீது இ.பி.எஸ். முதல் தாக்குதல்
" துவேச கருத்துகளை பேசுவதா? "- பிரதமர் மோடி மீது இ.பி.எஸ். முதல் தாக்குதல்
UPDATED : ஏப் 23, 2024 02:33 PM
ADDED : ஏப் 23, 2024 12:32 PM

சென்னை: நாட்டின் பிரதமர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவிப்பது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார். பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., வெளியேறிய பிறகு பிரதமர் மோடிக்கு எதிராக இ.பி.எஸ்., வெளியிட்ட முதல் அறிக்கை இதுதான்.
உகந்தது அல்ல
தேர்தல் பிரசாரத்தின் போது முஸ்லிம் மக்கள் குறித்த பிரதமரின் பேச்சு தொடர்பாக இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அரசியல் தலைவர்கள் மத துவேச கருத்துகளை அரசியலுக்காக தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டின் பிரதமர் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது இந்திய இறையாண்மைக்கு உகந்தது அல்ல.
தவிர்க்க வேண்டும்
இஸ்லாமிய மக்களின் மனதை புண்படும்படி கூறப்படும் இதுபோன்ற கருத்துகளை தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும் மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் தலைவர்களின் சர்ச்சைக் கருத்துகள் சிறுபான்மை மக்களின் மனதில் அச்சத்தை ஏ்றபடுத்துவதுடன், மத உணர்வுகளை தூண்டுகிறது. இந்திய இறையாண்மைக்கு எதிராக மத துவேச கருத்துகளை நாட்டின் நலனிற்காக முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்காக கண்ணியம் தவறிய மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் இந்திய இயைாண்மைக்கு எதிரானது. இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

