ADDED : ஏப் 09, 2025 12:49 AM

புதுடில்லி:சோன்பப்டி உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிப்பு நிறுவனமான, ஹல்திராம்சின் டில்லி மற்றும் நாக்பூர் பிரிவுகளின் இணைப்பை அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹல்திராம்சின் இரு கிளைகளான, டில்லியைச் சேர்ந்த 'ஹல்திராம் ஸ்நாக்ஸ்' மற்றும் நாக்பூரைச் சேர்ந்த 'ஹல்திராம் புட்ஸ் இன்டர்நேஷனல்' ஆகியவை அதிகாரப்பூர்வமாக இணைந்து, 'ஹல்திராம் ஸ்நாக்ஸ் புட் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் ஒருங்கிணைந்த நிறுவனமாக உருவாகியுள்ளதாக, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிரிஷன்குமார் சுதானி தெரிவித்துள்ளார்.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் அங்கீகாரத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இணைப்பின் வாயிலாக, இரு கிளைகளிலும் இருந்து முறையே, 56 மற்றும் 44 சதவீத பங்குகளை, புதிதாக ஒருங்கிணைக்கப்பட்டுஉள்ள நிறுவனம் கொண்டிருக்கும் என, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

