ADDED : ஆக 14, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., ஆட்சியாளர்களின் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகள் உள்ளிட்ட தனியார் பள்ளிகளை வாழவைப்பதற்காக, தமிழகம் முழுதும் 207 அரசுப் பள்ளிகளை மூடியுள்ளனர். இந்த அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வந்த இடங்களை, தனியாருக்கு தாரை வார்க்க முயல்வதாகவும் கல்வியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
என் தலைமையிலான அ.தி.மு.க., அரசு, ஒரே ஆண்டில், 11 மருத்துவக் கல்லுாரிகள், 60க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்று, பல திட்டங்களை செயல்படுத்தி, அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்தது. ஆனால், லேப்-டாப், தாலிக்குத் தங்கம் போன்ற நலத் திட்டங்களை நிறுத்தியதோடு, இப்போது அரசு பள்ளிகளையும் மூடி வருகின்றனர்.
- பழனிசாமி, பொதுச்செயலர், அ.தி.மு.க.,