ADDED : டிச 14, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால், மாநிலத்தின் பல பகுதிகளிலும் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு, ஆறுகளில் வெள்ளம், தரைப்பாலம் வெள்ள நீரால் துண்டிப்பு என பல பாதிப்புகள் இருந்தன.
மழையால் வீடுகளை பலர் இழந்துள்ளனர். வீடுகள் இடிந்து சிலர் உயிரிழந்துள்ளனர். 'இரண்டு நாள் மழைக்கே, தாக்கு பிடிக்க முடியவில்லையே' என்ற குரல் எழுந்து வரும் நிலையில், 'கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தான் பாதிப்புகள் அதிகமாகி விட்டன' எனக் கூறும் வார்த்தைகளையும் ஏற்கத் தான் வேண்டும்!

