அனுமதியின்றி கொடிக்கம்பம்; விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி கொடிக்கம்பம்; விஜய் ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு
ADDED : பிப் 21, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: தமிழர் வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் துவக்கி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் மாலை விஜய் ரசிகர் மன்றம் மற்றும் கட்சி நிர்வாகிகள் போலீஸ் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் நட்டனர். எலவனாசூர்கோட்டை போலீசார் அவற்றை அகற்றினர்.
தொடர்ந்து. அனுமதியின்றி கொடிக் கம்பங்களை நட்டதாக எலவனாசூர்கோட்டை போலீசார் மாவட்ட தலைவர் பரணிபாலாஜி, செயலர் மோகன், தலைவர் பழனிவேல், நிர்வாகி ஆசாத் ஆகியோர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
அதேபோல் திருநாவலுார் பகுதியில் நடப்பட்ட கொடிக் கம்பத்தை திருநாவலுார் போலீசார் அகற்றி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

