அறுந்து விழுந்த தே.மு.தி.க., கொடி: தடைக்கு பிறகுதான் வெற்றி கிடைக்கும்: பிரேமலதா நம்பிக்கை
அறுந்து விழுந்த தே.மு.தி.க., கொடி: தடைக்கு பிறகுதான் வெற்றி கிடைக்கும்: பிரேமலதா நம்பிக்கை
ADDED : ஜன 28, 2024 04:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தே.மு.தி.க., தலைமைக் கழகத்தில் விஜயகாந்த் மறைவையொட்டி அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த கழகக் கொடி ஒரு மாதம் கழித்து முழு கம்பத்தில் ஏற்றப்பட்டது.
தேமுதிக பொதுச்செயலாளராக முதல்முறையாக பிரேமலதா கொடியேற்றிய போது, பாதியிலேயே அறுந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர் புதிய கொடியை ஏற்றினார். பாதியிலேயே கொடி அறுந்து விழுந்ததால் தொண்டர்கள் அச்சத்தில் உறைந்தனர்.
தடைக்கு பிறகு தான் வெற்றி
பின்னர் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தடைக்கு பிறகுதான் வெற்றி கிடைக்கும் என்று சொல்வார்கள். இன்று கொடி அறுந்து விழுந்ததன் மூலம் எங்களுக்கு இருந்த அனைத்து தடைகளும் உடைத்தெறியப்பட்டுள்ளது. இன்றோடு எங்களின் தடைகள் விலகும். விஜயகாந்த் கட்சி துவங்கியதன் லட்சியம் நிச்சயம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

