விஜய் இயக்கம் பெயரில் போலி பக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி
விஜய் இயக்கம் பெயரில் போலி பக்கம்: ரசிகர்கள் அதிர்ச்சி
ADDED : பிப் 27, 2024 11:47 PM
சென்னை:விஜய் மக்கள் இயக்கம் பெயரில் துவங்கப்பட்டுள்ள போலி சமூக வலைதள பக்கத்தில் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய், சமீபத்தில், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை துவங்குவதாக அறிவித்தார்.
விஜய் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதற்காக, விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரில் உள்ள சமூக வலைதள பக்கங்களை பலரும் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
ஆனால், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் போலியாக பக்கம் துவங்கப்பட்டு அதில் ஆபாச வீடியோக்கள் அதிகளவில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இது போலி பக்கம் என்று தெரியாமல், 16,000த்துக்கும் மேற்பட்டவர்கள், அதில் இணைந்துள்ளனர். இது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்னையை, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக, மாவட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர்.
விஜய் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், அவரது அனுமதியைபெற்று, இப்பிரச்னையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

