ADDED : டிச 13, 2024 08:46 PM

'கார்களில் பம்பர்களை பயன்படுத்தக்கூடாது' என மோட்டார் வாகனச் சட்டத்தை மேற்கோள்காட்டி, தமிழக போக்குவரத்துத் துறை அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. விதி மீறி பம்பர்களை காரில் பொறுத்துவோர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிதக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பொது மக்கள் பயன்படுத்தும் கார்களில் பம்பர்கள் இருப்பதைப் பார்த்தால், காரை மடக்கிப்பிடித்து, உரிமையாளரிடம் அபராதம் விதிப்பதை போக்குவரத்து போலீசார் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ஆனால், அரசியல்வாதிகள் கார்களுக்கு மட்டும் இந்த விதி பொருந்துவதில்லை. அவர்கள், அரசியல்வாதிகளாக இருப்பதால், காரின் முகப்பில் கொடிகளைப் பார்த்ததும் போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்ளாமல் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் நடந்த சட்டசபைக் கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சென்னை, தலைமைச் செயல்கம் வந்த, பல கட்சி எம்.எல்.ஏ.,க்கள், கார்களை நிறுத்தி இருந்தனர். எல்லா கார்களிலும் பம்பர்கள் பளிச்சிட்டன.

