எஸ்.எஸ்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்
எஸ்.எஸ்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம்
ADDED : மே 17, 2025 06:49 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் எஸ்.எஸ்.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடடம் பெற்றனர்.
மாணவர் துஷ்யந்த், 493; மாணவி ஓவியா, 492; பிரித்திகா மற்றும் சுஜித்தா, 491 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
தேர்வு எழுதிய 106 மாணவர்களில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியலில் 7 பேர்; சமூக அறிவியலில் 5 பேர், 'சென்டம்' பெற்றுள்ளனர்.
மேலும், 5 பேர் 490க்கு மேலும், 19 பேர் 470க்கு மேலம், 33 பேர் 450க்கு மேலம், 57 பேர 400க்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை புரிந்த மாணவர்களை, சரஸ்வதி வித்யாலயா கல்வி அறக்கட்டளை தலைவர் இந்திரா, பொருளாளர் சாந்தி, தாளாளர் விஜயா, இணை செயலாளர் தமிழரசி, உறுப்பினர்கள் அருண் மோகன், சாந்தி, அன்புமணி, மஞ்சுளா, தக்ஷிணாமூர்த்தி ஆகியோர் பாராட்டி, சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
பள்ளி முதல்வர் திருவேங்கடம், துணை முதல்வர் ஜெய்கணேஷ் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டினர். பள்ளி போக்குவரத்து மேலாளர் மனோகரன் நன்றி கூறினார்.

