இபிஎஸ் செல்லும் இடமெல்லாம் அமோக ஆதரவு: நயினார் பேட்டி
இபிஎஸ் செல்லும் இடமெல்லாம் அமோக ஆதரவு: நயினார் பேட்டி
ADDED : செப் 11, 2025 10:38 AM

மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பிரசாரத்துக்கு செல்லும் இடமெல்லாம் அமோக ஆதரவு தென்படுகிறது என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரையில் நயினார் நகேந்திரன் பேட்டி:
அதிமுக-பாஜ கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டில்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்தது குறித்து எனக்கு தெரியாது. சந்தித்தாக அவர் கூறுகிறார். சந்திப்பதில் தவறு இல்லை.
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் செல்லுமிடமில்லாம் அவருக்கு அமோக ஆதரவு உள்ளது. அதிமுக-பாஜ உறவு நன்றாக உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின் யார் ஐசியூக்கு செல்வார் என்று உதயநிதிக்கு தெரியும்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தலைவர் நட்டா ஆகியோரிடம் நான் நற்பெயர் பெற்றுள்ளேன். அவர்கள் என் மீது தனிப்பட்ட முறையில் அன்பும் மதிப்பும் பாசமும் வைத்துள்ளனர். நெல்லை வந்திருந்த உள்துறை அமைச்சர் என் வீட்டுக்கே வந்திருந்தார்.
அதனால் பதவி விலக வாய்ப்பில்லை. அவசியமும் இல்லை
இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.