கொடைக்கானல், ஊட்டிக்கு செல்ல இ-பாஸ்: நீதிமன்றம் உத்தரவு
கொடைக்கானல், ஊட்டிக்கு செல்ல இ-பாஸ்: நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஏப் 29, 2024 05:59 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: ஊட்டி, கொடைக்கானல் செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் அமல்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இ-பாஸ் முறையை அமல்படுத்த தேவையான தொழில்நுட்பங்களை வழங்க தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.

