எங்களுக்கு அழுத்தம் தர வேண்டாம்: தமிழக அமைச்சர் மகேஷ் பேச்சு
எங்களுக்கு அழுத்தம் தர வேண்டாம்: தமிழக அமைச்சர் மகேஷ் பேச்சு
ADDED : செப் 09, 2025 06:39 AM

கோவை: 'இந்தியா டுடே' மாநாட்டில், பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
தேசிய கல்வி கொள்கையும், மாநில கல்வி கொள்கையும் ஒரே மாதிரியானது அல்ல. அது மும்மொழி, இது இரு மொழி சார்ந்த கொள்கை. தேசிய கல்வி கொள்கையில் மத சார்பின்மை புறக்கணிக்கப்படுகிறது.
கல்வியின் தரத்தை நுழைவுத் தேர்வால் மதிப்பிட முடியாது. காலை உணவு திட்டம், பாடப்புத்தகம், சீருடை வழங்குவதால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தேசிய திட்டங்களை நாங்கள் 'காப்பி' அடிப்பதில்லை; நாங்களே உருவாக்குகிறோம்.
எனவே, எங்கள் மீது அழுத்தம் தர வேண்டாம். தமிழகம் பள்ளி கல்விக்கு ரூ.46 ஆயிரத்து 767 கோடி ஒதுக்கியது. மத்திய அரசு, மொத்தமாகவே ரூ.78 ஆயிரம் கோடிதான் கல்விக்கு ஒதுக்கியது.இவ்வாறு மகேஷ் பேசினார்.
திறன் சார்ந்த கல்வி கர்நாடக மாநில தொடக்க மற்றும் இடைநிலை கல்வி அமைச்சர் மது பங்காரப்பா பேசுகையில், ''நாட்டின் குடிமகனாக மாணவர்கள் கல்வி பயில வேண்டுமே தவிர, கொள்கைகள் சார்ந்து அல்ல. அடுத்த கல்வியாண்டு, மாநில கல்வி கொள்கை கொண்டு வர உள்ளோம். சித்தாந்த திணிப்பு இன்றி மாணவர்கள் கல்வி பயில வேண்டும்,'' என்றார்.