காசி ஆன்மிக பயணம் போக விருப்பமா: அழைக்கிறது அறநிலையத்துறை!
காசி ஆன்மிக பயணம் போக விருப்பமா: அழைக்கிறது அறநிலையத்துறை!
UPDATED : நவ 02, 2024 07:13 PM
ADDED : நவ 02, 2024 06:09 PM

சென்னை: நடப்பு 2024-25ம் ஆண்டிற்கான ஆன்மிக பயணமாக, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச்செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டில், மண்டலத்திற்கு 21 நபர்கள் வீதம் 420 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க என்ன நிபந்தனைகள்:
* ஹிந்து மதத்தை சேர்ந்தவர், கடவுள் நம்பிக்கை உடையவர் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
* 60 வயது முதல் 70 வயது உட்பட்டவராக இருக்க வேண்டும்.(வயது சான்று இணைக்க வேண்டும்)
*ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். (வருமான சான்று இணைக்க வேண்டும்)
* 10 நாட்கள் சென்று வரும் இந்த ஆன்மிகப்பயணத்திற்கு உடல் தகுதிற்கான அரசு மருத்துவர் சான்று இணைக்க வேண்டும்.
*தற்போது வசிக்கும் நிலையான முகவரி இணைக்க வேண்டும்.
* ஆதார் அல்லது பான்கார்டு என் அட்டை நகல் இணைக்க வேண்டும்.
*இந்து அறநிலையத்துறையின் இணை ஆணையர் மண்டலத்திற்கு தலா 21 பேர் வீதம் 420 விண்ணப்பங்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவர்.
* விண்ணப்பிக்க கடைசி தேதி 16-12-24க்குள் அனுப்ப வேண்டும்.
* தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேவையான அத்தியாவசிய மருந்துகள் எடுத்து வரவேண்டும்.
* சிறு குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
* பயணத்தின்போது மிக விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது.
* தேர்வு செய்யப்படுவோர் ஆன்மிகப்பயணத்திற்கு முதல் நாளே தமது சொந்த செலவில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் அலுவலகத்தில் வருகை பதிவு செய்ய வேண்டும். அதே போல பயணம் நிறைவுக்கு பிறகு தமது சொந்த செலவில் அவரவர் இருப்பிடத்திற்கு திரும்ப வேண்டும்.
* காசி ஆன்மிகப்பயணம் ஒரு முறை மட்டுமே மானியம் பெற தகுதியானவர் என்பதால் இதற்கு முன் அரசு செலவில் காசி ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
மேற்கூறிய நிபந்தனைகளின்படி, விண்ணப்பங்களை தமது விலாசம் அமைந்துள்ள மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற வலைதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டிய முகவரி
இணை ஆணையர் அலுவலகம்
இந்து சமய அறநிலையத்துறை
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

