ADDED : பிப் 28, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
செந்தில் பாலாஜி, அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்டதற்காக, கைது செய்யப்பட்டு, 180 நாட்களுக்கு மேலாக புழல் சிறையில் இருக்கிறார்.
ஆனால், அவர் கைதாவதற்குள் நடத்தப்பட்ட நாடகங்கள் தான் சூப்பர். நெஞ்சு வலி என மருத்துவமனையில் சேர்ந்தது, அதுவும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றது, அறுவை சிகிச்சை நடந்ததாகச் சொல்வது...
இறுதியில் ஜாமின் மேல் ஜாமின் மனு போட்டு, அவை செல்லுபடியாகாமல் போனது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும், அவருடைய அமைச்சர் பதவியை நீட்டிக்க வைத்தது...
இனி அவர் எப்போது சிறையிலிருந்து வெளியே வருவார் என்பது, அந்த கடவுளுக்கே வெளிச்சம்; தீர்ப்பு தப்பாதே!

