பள்ளிக்கு விடுமுறை அளித்து நிகழ்ச்சி நடத்தும் தி.மு.க.,
பள்ளிக்கு விடுமுறை அளித்து நிகழ்ச்சி நடத்தும் தி.மு.க.,
ADDED : செப் 11, 2025 02:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நுாற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, தி.மு.க., அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்திருக்கிறது. தி.மு.க.,வின் விளம்பர நாடகங்களுக்கு, அரசு பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.
பள்ளி கல்வித் துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. அந்த துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, 100க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, தி.மு.க.,வின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்கிறது. இதற்கு முதல்வரின் பதில் என்ன?
- அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,