ADDED : ஏப் 29, 2026 10:48 PM

சென்னை: ஓட்டு எண்ணிக்கையின்போது, தில்லுமுல்லு செய்ய, திமுக திட்டமிட்டுள்ளது என, தேர்தல் கமிஷனிடம், தவெக முறையிட்டுள்ளது.
தவெக இணை பொதுச் செயலர் நிர்மல்குமார், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து, மனு அளித்தார். அதன்பின் அவர் அளித்த பேட்டி: ஓட்டு எண்ணிக்கையில், தில்லுமுல்லுகளை செய்து, குளறுபடிகளை ஏற்படுத்த, திமுக முயற்சி செய்து வருகிறது. எனவே, ஓட்டு எண்ணிக்கை அறையில், மத்திய பாதுகாப்பு படையினரை, கூடுதலாக பணி அமர்த்த வேண்டும். தபால் ஓட்டுகள், யாரிடமிருந்து எங்கிருந்து வருகிறது என்பதை, பதிவேட்டில் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
தபால் ஓட்டு எண்ணிக்கையை, 'வீடியோ' பதிவு செய்து, அதை கட்சிகளுக்கு வழங்க வேண்டும். தபால் ஓட்டுகளை 'ஸ்கேன்' செய்ய வேண்டும். தபால் ஓட்டுகள் எண்ணி முடித்து பின், இயந்திரத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கையின், கடைசி இரண்டு சுற்றுகளை தொடர வேண்டும் என, கோரிக்கை வைத்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.
