தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு

தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு

தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு

13


ADDED : ஏப் 13, 2026 07:49 AM

Follow on GoogleFavourite on Google

13

ADDED : ஏப் 13, 2026 07:49 AM


13
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லுார் தொகுதியில் தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., கதிரவன் போட்டியிடுகிறார். அவர் சோழங்கநல்லுார் கிராமத்தில் பிரசாரம் செய்தபோது, 'அங்குள்ள ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்று சொன்ன வாக்குறுதி என்னவானது' என்று இளைஞர் ஒருவர் கேட்டார்.

அதற்கு பதில் அளித்து கதிரவன் எம்.எல்.ஏ., பேசியதாவது: புள்ளம்பாடி வாய்க்காலுக்கும், ஏரிக்கும் பதினோரு வேறுபாடு உள்ளது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர். திட்ட செலவு பெரிய தொகை என்பதால், அரசு அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.

தாலி கட்டிய உடனே எல்லாம் நடந்துறாது. மெதுவாகத்தான் நடக்கும். உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால செய்ய முடியாது. நீ எனக்கு ஓட்டே போட வேணாம். உன் ஓட்டும் தேவையில்லை. இவ்வாறு பேசினார்.

பேசிவிட்டு, பிரசார வேனை அங்கிருந்து கிளப்பிக் கொண்டு கதிரவன் எம்.எல்.ஏ., சென்று விட்டார். அவர் பேசும்போது, கேள்வி கேட்டவரை நீ, வா, போ என்று ஒருமையில் பேசியதும், தி.மு.க., பிரமுகர் ரவி என்பவரை, டேய் லுாசு என்று மைக்கில் பேசியதும், கிராம மக்களை முகம் சுளிக்க வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us