181 ஆண்டு தாமிரபரணி பாலத்தில் ஓட்டை போட்ட தி.மு.க.,வினர்
181 ஆண்டு தாமிரபரணி பாலத்தில் ஓட்டை போட்ட தி.மு.க.,வினர்
ADDED : டிச 29, 2024 06:53 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் அருகே 181 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில், தி.மு.க.,வினர், 'ட்ரில் மெஷின்' கொண்டு ஓட்டை போட்டதை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி, கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் அருகே தாமிரபரணி ஆற்றின் குறுக்கே, 1843ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அதிகாரியாக பணியாற்றிய சுலோச்சனா முதலியார் நிதியில் கட்டப்பட்ட பாலம் அவரது பெயரில் உள்ளது.
திருநெல்வேலியில் நேற்று அமைச்சர் நேரு பங்கேற்ற தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்காக ஆற்றுப்பாலம் முழுதும் இரு புறங்களிலும், ட்ரில் மெஷின் கொண்டு ஓட்டை போட்டு, இரும்பு கம்பிகளில் கட்சி கொடிகளை ஏற்றினர்.
பழமையான பாலத்தில் இவ்வாறு தி.மு.க.,வினர் ஓட்டை போட்டதை கண்டித்து, அ.தி.மு.க.,வினர் பாலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலர் கணேசராஜா, அமைப்பு செயலர் சுதா பரமசிவம் தலைமையில் அக்கட்சியினர் பங்கேற்றனர்.
அவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தினர். இதையடுத்து, கொடிக்கம்பங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. தி.மு.க.,வினர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி, அ.தி.மு.க.வினர் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யாவிடம் புகார் மனு அளித்தனர்.

