ADDED : டிச 16, 2025 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் கடந்த 55 மாதங்களில், 6,700 படுகொலைகள் நடந்துள்ளன. இவை அனைத்தும், மது உள்ளிட்ட போதை வஸ்துகளால் நிகழ்ந்த கோர சம்பவங்கள். தி.மு.க., ஆட்சி வருவதற்கு முன், நாட்டிலேயே பஞ்சாப் மாநிலத்தில் தான் அதிகளவு போதை வஸ்து விற்கப்பட்டது. தற்போது, போதைப்பொருள் விற்பனையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மேலும், 3,000 கோடி ரூபாய் அளவுக்கு, 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப்பொருள் கடத்தியவர், தி.மு.க., அயலக அணி செயலராக இருந்த ஜாபர் சாதிக்.
போதைப்பொருள் வாயிலாக கிடைத்த பணத்தை, தமிழகத்தில் ஆளுங்கட்சியின் முதல் குடும்பம் பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. அதனால், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகம் இருண்டு போ கும். தமிழகத்தின் அடுத்த தலைமுறையை, தி.மு.க., அழித்துக் கொண்டிருக்கிறது.
- எச்.ராஜா
மூத்த தலைவர், தமிழக பா.ஜ.,

